Phonetic
Tamil Typewritter
Tamil 99
4) You can enable the Show Keymap as follows: Show Keymap
Online Keymap Help

தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch)

Thursday, September 13, 2007

இந்திய அமெரிக்க அனூ சக்தி ஒப்பந்தம் - இந்து ஆசிரியர் என் ராம் உரை

சென்னை வளர்ச்சியியல் ஆய்வு மைத்தின் (எம் ஐ டி எஸ்) சார்பில், இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த நிபுணர்கள் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செப் 11 அன்று சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த நிபுணர் கலந்துரையாடலை, எம் ஐ டி எஸ் பேராசிரியர் ஜனகராஜன் நெறிப்படுத்தினார். இந்த உரையாடலில் இந்து இதழ் ஆசிரியர் என் ராம், இந்திய அணுசக்திக் கமிஷனின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம் ஆர் சீனிவாசன், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆய்வு மைய முன்னாள் தலைவர் பேராசிரியர் ரோட்ரிக்ஸ், சர்வதேச சட்டவியல் குறித்து ஆய்வு செய்யும் எம் ஐ டி எஸ் ஆய்வு மாணவியும் வழக்கறிஞருமான ஸ்வப்னா சுந்தர் ஆகியோர் உரையாற்றினர். மத்தியில் உள்ள மைனாரிட்டி அரசு ஏன் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இவ்வளவு தீவிர அக்கறை காட்டுகிறது என்ற கேள்வியை என் ராம் எழுப்பினார். என் ராம் ஆற்றிய 45 நிமிட உரையும், விவாதங்களின் போது அவர் அளித்த விளக்கங்களும், இந்த ஒப்பந்தம் குறித்த விவாதங்களின் போக்குகளை விரிவாக அறிந்து கொள்ள உதவும். தமிழ் இதழ் எதிலுமே, இந்த கருத்தரங்கம் அல்லது நிபுணர் உரையாடல் குறித்த செய்திகள் பதிவு செய்யப் படவில்லை. ராம் ஆற்றிய 45 நிமிட உரையை எடிட் செய்யாமல் அப்படியே இங்கே தருகிறோம். இந்த பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு இந்த உரை பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எம் ஆர் சீனிவாசனின் உரையையும், பிற 2 நிபுணர்களின் உரையையும் விரைவில் இப்பகுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

please click the link to listen N Ram's speech


http://video.google.co.uk/videoplay?docid=-6100324732415013779

அருள்

Labels:

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home


    World News Feed
Loading...please relax for a few seconds