tag:blogger.com,1999:blog-25226940.post114572809995949826..comments2023-09-17T00:54:38.414-07:00Comments on தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch): தினத் தந்தியைத் திருப்பும்பக்கமெல்லாம் சரத்குமார்Arulselvanhttp://www.blogger.com/profile/07709069929599502515noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-25226940.post-1145751794290652192006-04-22T17:23:00.000-07:002006-04-22T17:23:00.000-07:00முதலில் உங்களின் கருத்துக்கு நன்றி. பா ஜ க வுக்கு ...முதலில் உங்களின் கருத்துக்கு நன்றி. பா ஜ க வுக்கு உரிய இடம் இடம் ஒதுக்கப் பட வில்லை என்று எப்போதும் நாங்கள் இந்த விமர்சனங்களில் ஒரு வரி கூடச் சொன்னதில்லை என்பது உண்மை தான். ஆனால், தலித் இயக்கங்களுக்காக வாதாடுவதும் பா ஜ க விற்காக வாதாடுவதும் ஒன்றாகுமா? ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை இனத்தவர்களுக்காக எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அந்தந்தக் குரல்களுக்கும் உரிய இடங்களை வழங்கவில்லை என்று கூறுவது எப்படித் தவறாகும்? பக்கச் சார்பற்ற ரிப்போர்ட்டிங் சாத்தியம் தான். பல உலகப் பத்திரிகைகள் மிகவும் நியாயத்துடனும், நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பக்கம் சாராமலும் ரிப்போர்ட்டிங் செய்து வருகின்றன என்பதை இந்த வலைப்பூவின் பின்னூட்டத்திலேயே சிலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். யாருக்கும் சார்பாக வாதிட வேண்டிய தேவையில் நாங்கள் இல்லை. நாங்கள் செய்வது ஒரு கல்விப் பயிற்சி. இதில் வணிக நோக்கமோ, அரசியல் நோக்கமோ இல்லை. எனவே உங்களின் குற்றச்சட்டை ஏற்க முடியாது என்று கூறிக் கொள்கிறோம். <BR/><BR/> ஊடக விமர்சனக் குழுவினர்Arulselvanhttps://www.blogger.com/profile/07709069929599502515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25226940.post-1145730583369988422006-04-22T11:29:00.000-07:002006-04-22T11:29:00.000-07:00முதலில் நீங்கள் பாரபட்சமில்லாமல் எழுத முயற்சியுங்க...முதலில் நீங்கள் பாரபட்சமில்லாமல் எழுத முயற்சியுங்கள். பிறகு ஊடகங்கங்களின் பாரபட்சம் பற்றி பேசலாம். இந்த தேர்தலில் 3 அணிகள், 1 தனிக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக, திமுக, பாஜக, விஜயகாந்தின் கட்சி ஆகியவை. அதிமுக, திமுக, விஜயகாந்தின் அணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அக்கறையையும் என்றாவது பாஜக அணிக்கு கொடுத்திருக்கிறீர்களா? நீங்களே தேடிப்பாருங்கள் உங்கள் பதிவுகளில். எத்தனைமுறை பாஜக என்ற வார்த்தை வருகிறது, எத்தனைமுறை திமுக, அதிமுக, விஜயகாந்த், திருமாவளவன் ஆகிய வார்த்தைகள் வருகின்றன என்று ஆராய்ந்து பாருங்கள். உங்களது பாரபட்சம் உங்களுக்கே தெரியும். இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்ற பாரபட்சங்கள் உங்களைப் பற்றியே நன்றாக சொல்கின்றன. பாரபட்சமில்லாத ரிப்போர்ட்டிங் சாத்தியமில்லை என்பதற்கு நீங்களே நல்ல ஒரு உதாரணம்.Anonymousnoreply@blogger.com