Monday, May 08, 2006

விடை பெறுகிறோம்

ஏறத்தாழ 40 நாள் அற்புதமான பயிற்சிக்குப் பின், இப்போதைக்கு விடை பெறுகிறோம். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செய்திகளைத் தமிழ் இதழ்கள் எப்படிக் கையாணடன் என்பதைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும், அது குறித்து விவாதிப்பதற்கும், தமிழ்ப் பத்திரிகைகளில் பணியாற்றப் போகும் எங்களில் பலருக்கும், இனி தொடர்ந்து மாணவர்களைப் பயிற்றுவிக்கவிருக்கும் எங்களின் ஆசிரியர்களுக்கும் இந்தப் பயிற்சி ஒரு அற்புத அனுபவமாக இருந்தது. இதில், உலகத் தமிழர்கள், தமிழ் மணம் வாயிலாக முன் வைத்த ஆக்கப் பூர்வமான விமர்சனங்கள் எங்களின் பணியைப் பெரிதும் ஊக்கப் படுத்தின. இந்த ஆய்வுகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட சில செய்திகளை ஆய்வு செய்வதைத் தொடர்வது என்று தீர்மானித்திருக்கிறோம். குறிப்பிட்ட மனித உரிமை மீறல்களைப்பதிவு செய்வது குறித்து நாளிதழ்கள் எப்படிக் கையாள்கின்றன, பிற உரிமை சார்ந்த பிரச்னைகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்றும் தொடர்ந்து ஆய்வு செய்வோம். பிரச்னைக்குரிய விஷயம் தென்படும்போது, நிச்சயம் எங்களின் பதிவு இடம் பெறும். எங்களின் உறிப்பினர்கள் மாறிக்கொண்டே இருக்கலாம். வ்ழிகாட்டும் ஆசிர்யர்கள் மட்டும் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். 4 பத்திரிகைகளில் 3 பத்திரிகையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் எங்களின் பதிவுகளைக் கவனித்து வந்தனர் என்பது எங்களின் பணியை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

ஊடக விமர்சனக் குழுவினர்.


மே 07 08 ஆகிய நாட்களில் வெளி வந்த செய்திகள் குறித்த பதிவு:

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் பட்டதாக பத்திரிகைகள் புகார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையில் வாக்காளர்களுக்குப் பணம் கையூட்டாக வழஙகப் பட்டிருப்பதாக தினகரன் தவிர்த்த 3 பத்திரிகைகளுமே பதிவு செய்துள்ளன. ஆனால், இது போன்ற ஒரு மிகவும் சீரியசான ஒரு விஷயத்தைக் கூட தொழில் முறை நேர்த்தியுடன் பதிவு செய்ய 3 பத்திரிகையுமே முயற்சிக்க வில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தினத் தந்தி 8 5 2006 ப.20

குடம், புடவை, பேனாவுக்குள் மறைத்து வைத்து பணம் சப்ளைஅரசியல் கட்சிகள் புகார்: இரவு முழுவதும் போலீஸ் கண்காணிப்பு,

என்ற தலைப்புடன் தினத்தந்தியில் ஒரு செய்தி பதிவு செய்யப் பட்டுள்லது. அந்தச் செய்தியின் முகப்புரை இது:சென்னையில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு குடம், புடவை, பேனா ஆகியவற்றுக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுப்பதாக நேற்றிரவு போலீசுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் 07 05 2006 ப.16

குவார்ட்டர் பாட்டில், கமகம பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள் தயார்

என்ற தலைப்புடன்வெளியாகியுள்ள இந்தச் செய்தியிலும், யாரையும் மேற்கோள் காட்டாமல் இந்த செய்தி விலாவாரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

"குவார்ட்டர்' பாட்டில், "கமகம' பிரியாணியுடன் ஓட்டு வேட்டையாட கரை வேட்டிகள்
தயார்
சென்னை: தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் "கிக்'
ஏற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் மற்றும் "கமகம'க்கும் பிரியாணி பொட்டலங்களுடனும்
வாக்காளர்களை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. அனைத்து ஒயின்
ஷாப்புகளுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு
தினங்களுக்கு முன்னதாகவே, குவார்ட்டர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து
மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன.
இருப்பினும், நேற்றும் சில டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் அங்கு கரை
வேட்டிகள், வேன்களிலும் ஆட்டோக்களிலும் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கிச் செல்வதைக்
காண முடிந்தது.
எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய பிரதான கட்சிகள்
மட்டுமின்றி பா.ஜ., தே.மு.தி.க., மற்றும் சுயேச்சைகள், உதிரிக்கட்சிகள் களத்தில்
உள்ள காரணத்தால் அனைத்துக் கட்சிகளுமே வாக்காளர்களைக் கவர பல்வேறு கவர்ச்சிகரமான
அறிவிப்புக்களை நாளுக்குநாள் அறிவித்து வருகின்றன. இது தவிர வாக்காளர்களை சந்தித்து
ஓட்டுக்களை "மானாவாரியாக' பெற்று விடுவதற்காக அனைத்துக் கட்சிகளுமே "பகீரத
பிரயத்தனம்' செய்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை நகரில்
உள்ள 14 தொகுதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளிலிருந்து விஸ்கி, ரம், வோட்கா, பீர், ஒயின் ஆகியவற்றை வேட்பாளர்கள் கொள்முதல் செய்து ரகசிய இடங்களில் மறைத்து வைத்துள்ளனர். தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு "சப்ளை' செய்யும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர். குறிப்பாக, ரூ.49 முதல் ரூ.52 வரை விலையுள்ள ஆர்டினரி பிராண்ட் (180 மி.லி.,), ரூ.60 முதல் ரூ.62 வரை விலையுள்ள மீடியம் பிராண்ட் (180 மி.லி.,) மற்றும் ரூ.70 முதல் ரூ.123 வரையுள்ள பிரிமியம் பிராண்ட் பாட்டில்களுக்குப் பிரத்யேக மவுசு ஏற்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் ஓல்டு மங்க், மானிட்டர் பிராந்தி, மெக்டெவல், ஜானெக்ஷா, கிங் பிஷர், கோல்கொண்டா, சிவா ரம், பேக் பைப்பர், பிளாக் நைட் வகையறாக்கள் அதிகமாக கரை வேட்டிக்காரர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மது வகைகளுமே ஸ்டிராங்க், எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் மற்றும் சூப்பர் ஸ்ட்ராங்க் என்று மூன்று ரகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதான கட்சிகளுமே சரக்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து விட்டதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கையிருப்பில் வைக்க வேண்டிய அளவை விட மிகக் குறைவாகவே சரக்குகள் உள்ளன. அதே போல் வாக்காளர்களுக்கு குவார்ட்டர் பாட்டில்களுடன் பிரியாணி பொட்டலங்களை வழங்கவும் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே உள்ள பிரியாணி கடைகளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவற்றை செய்து பொட்டலம் கட்டித் தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சைதாப்பேட்டை பகுதிகளில் பல கடைகளில் பிரியாணி செய்து தருவதற்கும் "ஆர்டர்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து குவார்ட்டர் பாட்டில்களையும், பிரியாணி பொட்டலங்களையும் கொடுக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி 08 05 2006 ப. 5
வாக்களர்களுக்குப் பணம் அளிப்பு? பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பு

ன்ற தலைப்பில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இந்தச் செய்தியின் முகப்புரை:திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் கூறப் படும் புகார்கள் குறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ....

தினமலரில் தொடரும் ஆதாரமற்ற செய்திகள்...

செய்தித் தாளில் இடம் பெறும் செய்திகளை வரலாற்றின் முதல் படி என்று அறிஞர்கள் குறிப்ப்டிவர். அதனால், அதை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பதிவு செய்ய வேண்டிய கடமை செய்தியாளர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும் உண்டு. குறிப்பாக செய்தியை வதந்தியிலிருந்து வேறு படுத்திக் காட்டும் துணிவும், நேர்மையும் பத்திரிகையாளர்களிடம் இருக்க வேண்டும். இது பத்திரிகைக்கு நம்பகத் தன்மையையும் அதிகரிக்க உதவும்.

தினமலர் மே 7 2006 ப.1

விஜய டி ராஜேந்தருக்கு திமுக ஆதரவுகூட்டணி கட்சிகளின் காலை வார முடிவு

என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
விஜய டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் காலை வார திமுக தயாராகி வருகிறது என்பது தான் இந்தச் செய்தியின் சாராம்சம். இது ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்றோ, இது ஒரு ஆதாரமற்ற குற்றச் சாட்டு என்றோ எளிதில் ஒதுக்கி விட முடியும். இந்தச் செய்தி முழுக்க எவரையும் உரிமையாக்கிக் கூறப் படவில்லை. இதே போல 8 5 2006 அன்று ஒரு ரூபாயில் ஒரே இந்தியா திட்டம் படு தோல்விசில ஆயிரம் பேர் கூட திட்டத்தில் சேர முன் வரவில்லை என்ற தலைப்புடன் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. இதுவும் ஏறத் தாழ ஒரு அவதூறுக்குச் சமமானது. தயாநிதி மாறன் மீதான கோபத்தின் வெளிப்பாடாக இந்தச் செய்தியை வாசகர்கள் எளிதில் இனம் கண்டு கொள்வார்கள்.

தினகரன், 07 05 2006 ப15

மேடை ஏறவில்லை ஜெயலலிதாசென்னையிலும் கூட்டம் இல்லை

என்ற தலைப்பில் ஒரு செய்தி. இதில் ஜெயலலிதா மேடை ஏறவில்லை என்ற தகவலை வைத்துக் கொண்டு, சென்னையிலும் கூட்டம் இல்லை என்ற தகவல் மிகப் படுத்திக் கூறப் பட்டிருப்பதாகக் கருத இடமிருக்கிறது. போட்டி அரசியலில், தினகரன் இப்படி செய்தி வெளியிடுகிறதோ என்று கருத இடமிருக்கிறது. தினகரன், இதற்கு முன்பு வெளியிட்ட புகைப் படங்கள் நம்பும் படியாக இல்லை என்பதை ஏற்கனவே ஆதரங்களுடன் இங்கே நிரூபித்திருக்கிறோம்.

பத்திரிகைகளில் தகவல்களை மக்கள் முன் வைப்பதை விடுத்து, நேரடியாகப் பிரச்சாரத்திலும், தாமே அரசியல் நடத்துவதிலும் தீவிரமாக இறங்கி விடுகின்றன. தினகரனும், தினமலரும் தீவிர நிலைப்படுகளை எடுத்து, சிலரை ஆதரித்து, சிலரை இருட்டடிப்புச் செய்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.தினத் தந்தி அதிமுகவையும், நாடர்களையும் பாதுகாப்பதற்காக அவதாரம் எடுத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.


தினமணி, இந்த 3 பத்திரிகைகளை ஒப்பிடுகையில் கொஞ்சம் சகித்துக் கொள்ளலாம் என்றாலும், முழுமையான ஒரு நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாகக் கொள்ள இடமில்லை என்பதும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. தமிழின் தரமான பத்திரிகை இனிதான் வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்ற குறிப்புடன்விடை பெறுகிறோம்

ஊடக விமர்சனக் குழுவினர்

11 comments:

பெத்தராயுடு said...

இவ்வாறான விமர்சனம் எல்லாம் தமிழ்நாட்டு செய்தித்தாட்களுக்கு புதிதாக இருந்திருக்கக்கூடும்.


சிறப்பான பணி. ஊடக விமர்சன குழுவினருக்கு வாழ்த்துகள்.

தமிழ் சசி | Tamil SASI said...

இம் முறை வலைப்பதிவுகளில் ஊடகங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை உங்கள் பதிவுகள் முன்வைத்தன. ஆய்வுகள் சிறப்பாகவும் இருந்தன.

இந்த விமர்சனங்கள் எல்லாம் வணிக மயமாகி விட்ட ஊடக உலகில் எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்றாலும் இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து பல விடயங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தலுடன் மட்டுமே இது இருந்து விடக்கூடாது.
உங்களைப் போன்ற பலர் இந்த வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.

நம்முடைய ஊடகங்களின் லட்சணத்தை பலரும் தெரிந்து கொள்ள இது போன்ற வலைப்பதிவுகள் ஒரு வாய்ப்பாக இருக்கும்

ஊடகத்துறையில் உங்களின் எதிர்காலம் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

Sivabalan said...

You have done a great job!!

Hats off to your effort!!

Keep up!!

Anonymous said...

அதற்குள் போவதென்றால் எப்படி?
இனிமேல்தானே நிறைய விசயங்கள் இருக்கின்றன.
தேர்தல் முடிவுகளும் அவை வெளிப்படும் விதமும், தலைவர்களின் அறிக்கைகள், கொடுத்த வாக்குறுதிகள் சம்பந்தமான செய்திகள், அறிக்கைகள் என்று பலதரப்பட்டவை உள்ளனவே. ஊடகங்கள் முன்பு எடுத்திருந்த நிலைக்கும் தேர்தல் முடிவுகளுக்குப்பின்னால் எடுக்கும் நிலைக்குமிடையிலான வேறுபாடுகள் கூட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவையே.
எனவே தொடர்ந்தும் உங்கள் அவதானிப்புக்களைச் செய்வதும் அவற்றை வெளிப்படுத்துவதும் முக்கியமே.

Kasi Arumugam said...

சீரிய பணீயை செவ்வனே முடித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தப் பயிற்சி உங்கள் கல்விக்கும் தொழிலுக்கும் பலவகையில் உதவும் என்று நம்புகிறேன்.

அவ்வப்போது மறுமொழியாவிட்டாலும், பொதுவாக வாய்ப்புக்கிடைக்கும்போது உங்கள் இடுகைகளை வாசித்திருக்கிறேன். நல்ல நடுநிலையான திறனாய்வுகள்.
வாழ்க!

தேசாந்திரி said...

தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பிரயோசனமாக இருந்தன. நன்றி.

Anonymous said...

Thanks a lot for the posts.Commendable job.

கோவி.கண்ணன் said...

உங்கள் பணி தொடர்ந்து தமிழ் பத்திரிக்கை உலகில் தொடர வாழ்த்துக்கள், பத்திரிக்கைகள் இன்னொரு நீதிமன்றம் என்பதை பத்திரிக்கைகள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஆற்றப் போகிறப் பணியில் உங்கள் பத்திரிக்கை நீதிமன்றமாகவும், நீங்கள் நீதிபதிகளாகவும் நடந்து கொள்வீர்கள் என்று உறுதி ஏற்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நளைய உலகம் உங்கள் கைகளில் தவழ காத்திருக்கிறது, அணைத்து வளர்த்துச் செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும், உங்கள் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளில் எந்த காரணத்தை முன்னிட்டும் தினித்துவிடாதிர்கள், அப்படி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நுழைக்க முற்பட்டால் நீங்கள் சார்பு நிலையில் தொடர்ந்து செல்ல நேரிடும், பிறகு எது செய்தாலும் தடுமாற்றமும், விமர்சணங்களும் மிஞ்சும், சாதனைகளை யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.

நேர்மையாணவர்களையே மக்கள் என்றும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நிஜம். இருந்தாலும் சந்தர்பவாதிகளாலேயே பெரும்பாலும் அந்த இடம் நிறப்படுகிறது. ஆயிரம் அரசியல் வாதிகள் தினம் பிறக்கும் நம் நாட்டில் ஆண்டுக்கு ஒரு காந்தி கூடப் பிறப்பதில்லை என்பது சாபக்கேடு.

சரித்திரங்கள் எந்த கருத்தையும் முறியடிக்கும், மாற்றிவைக்கும். அந்த சரித்திரத்தில் உங்கள் பங்கும் ஒரு அங்கமாக நிற்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

உங்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துக்கள்.

கோவி. கண்ணன் (நாகை)
சிங்கப்பூர்

வலைஞன் said...

இது வலைப்பதிவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஊடகத்துறைக்கும் சுய பரிசோதனைக்கு உதவக்கூடிய பதிவாக இருந்தது. நன்றி நண்பர்களே.

நீங்கள் படிப்பு நிறைவு செய்த பின்னரும் உங்களில் சிலராவது தொடர்ந்து வலைப்பதிய வேண்டும். உங்களைப்போன்ற இளைய தலைமுறையால் மட்டுமே இத்தகைய ஊடக வன்முறைக்கு மாற்று உருவாக்க முடியும்.

வலைப்பதிவதற்கான எந்த ஆலோசனைக்கும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன்

வலைஞன் [cisrofs at gmail dot com]
http://akaravalai.blogspot.com
http://valai.blogspirit.com

Arulselvan said...

A Word of Appraisal from the Press Council of India.

Mr Vibha Bhargava, Secretary of the Press Council of India, has sent a word of appreciation in response to our intimation to the PCI, about the blogspot on TN Media Watch by the Students of Journalism.

Here is the copy of the letter:

Dated 28 4 2006

Sub: Media Watch Blog by the Journalism Students..

Sir,

We are in receipt of your email message dated April 19 2006 on subject cited above and are pleased to learn that journalism students of Manonmaniam Sundaranar University, Tirunelveli, Tamilnadu have been conducting content analysis of four Tamil Nadu Newspapers on the eve of forthcoming Tamil Nadu Assembly Elections 2006 and uploading their analysis on the web blog, which is being widely read.

The initiative taken by the students is extremely commendable and would serve to present a clear picture to the readers about the coverage of election related news being printed in the newspapers of their State. You may like to refere to "Election Reporting" related guidlines drawn up by the Council available on the website of the Council at http://presscouncil.nic.in under head "Norms of Journalistic conduct".

We are sure the student would continue their efforts to strengthen the democratic process of the country.
Yours faithfully,
sd
(Vibha Bhargava)
Secretary
Press Council of India
Soochna Bhawan, 1st, 2nd and 3rd Floor, Phase 4, 8 CGO Complex, Lodhi Road, New Delhi 110 003 Phone: 24366745-46-47-49

email : pcids@vsnl.net
http://presscouncil.nic.in _________
Find below a copy of the mail sent to the Press Council of India, by the Media Watch Team, intimating the students initiative.


Dear Sir/Madam,

This is to inform you that the Final Year Journalism students of Manonmaniam Sundaranar University, Tirunelvlei, Tamilnadu, have been conducting content analysis of the four widely circulated newspapers of Tamil nadu, on the eve of Tamilnadu Assembly Elections 2006. We publish our commentary on a web blog created exclusively for this analysis. We present an accurate and unbiased research report on a day to day basis. The day to day research report is published in our blog http://tnmediawatch.blogspot.com

The research report is publshed in Tamil, and more than one hundred thinkers, activists and Journalists read the blog everyday. Hope we can bring out a final publication out of our 30 days of experience in publishing the election related contents in the Tamil newspapers.

This is to bring out the significant events related to the Indian Media to the knowledge of honourable Press Council of India.

With regards,
Media Watch Team.

_____
mediawatch06
Students of Media Studies
Department of Communication,
Manonmaniam Sundaranar University
Tirunelveli 627 012

Unknown said...

கோடை விடுமுறைல ஊருக்கு போகலையா?