Tuesday, April 25, 2006

தமிழின் தரமான பத்திரிகை இனிதான் ஆரம்பிக்கப் படவேண்டும்

[இது தேர்வுக் காலம்...

தமிழக சட்ட்டப் பேரவைத் தேர்தல் காரணமாக, பல்கலைக்கழகத் தேர்வுகள் முற்போடப் பட்டுள்ளன. எமக்கும் தேர்வுகள் தொடங்கி விட்டன. எனவே, 23, 24 25 ஆகிய மூன்று நாட்களிலும் ஆய்வு ஒரே நாளாக இன்று 25 4 2006 அன்று நடத்தப் பட்டு ஒரே அறிக்கையாகத் தரப்படுகிறது. தேர்தல் முடியும் வரை அன்றாடம் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை விவாதத்திற்காக முன் வைப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஊடக விமர்சனக் குழுவினர்]

எம்மைக் கவர்ந்த 3 பத்திகள்:

இந்தியா டுடே தமிழ் இதழில் (மே 3, 2006 ப.17 மற்றும் ப.18) தமிழக அரசியல் தலைவர்கள் அள்ளி வீசும் இலவச அறிவிப்புக்கள் குறித்த 3 விமர்சனங்கள் கவனிக்கத் தக்கவை: சென்னையிலுள்ள Institute of Development Alternative இல் பணி புரியும் ரெங்கராஜனுடைய "இலவசங்களும் இடைவெளிகளும்", என்ற தலைப்புடனும், "பொது விநியோகத் துறையும் அது சார்ந்த சலுகைகளும் கூலித் தொழிலாளர்களின் தற்கொலைகளைத் தடுத்திருக்கிறது", என்ற துணைத் தலைப்புடனும் வெளியாகியிருக்கும் கட்டுரை. இதில் முன் வைக்கப் பட்டுள்ள வாதங்கள் போன்ற விவாதங்கள், இதுவரை தமிழ் ஊடகப் பரப்பில் எங்குமே காணப் படாதவை. அதிலிருந்து ஒரு பத்தியை மட்டும் கீழே தருகிறோம்: (முழுவதும் அப்படியே வெளியிடுவது இந்தியா டுடேயின் பதிப்புரிமையை மீறிய செயல் என்பதால், அது தொடர்பான வழக்குகளைச் சந்திக்கும் திராணியற்ற நிலையில் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகிறோம்): ............சந்தையை மட்டுமே மையப் படுத்தி பொது விநியோகத் துறையை நிராகரித்து உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் முன் வைக்கும் கருத்துக்கள் நமது சூழலுக்குப் பொருந்தாதவை. விவசாயம் நலிவுற்றதால், இ ங்கு ள்ள விவசாயக் கூலிகள் வலி மிகுந்த ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வேறு கூலித் தொழில்களுக்கு தங்களை மாற்றிக் கொள்வது அவ்வளவு சாதாரணமான விஷயமில்லை. எந்தவொரு பிரதான தொழிலிருந்தும் மாறுவதை நாம் சுலபமாகக் கருத முடியாது. அந்த மாற்றத்தை ஈடுகட்டுவதற்கு ரேஷன் முறை உதவுகிறது. இங்கு பொது வழங்கல் துறை சீராக இயங்குவதால் தான் மகாராஷ்ட்ராவைப்போலவோ, ஆந்திராவைப் போலவோ, விவசாயக் கூலிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படவில்லை..... அடுத்தது "இருவரின் இலவசக் கூட்டணி", என்ற தலைப்புடனும், இலவசங்களை எதிர்பார்த்து ஏங்கிக் கிடப்பவர்களகவே மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதாவின் திட்டம்", என்ற துணைத் தலைப்புடனும் வெளியாகியுள்ள ஞானியின் விருந்தினர் பத்தி. அதே இந்தியா டுடே இதழின் 18ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதிலிருந்து ஒரே ஒரு பத்தி மட்டும், உங்களின் பார்வைக்காக..... ............... ……………………………………....... சைக்கிளையோ டி வி பெட்டியையோ , அரிசியையோ தன் சொந்தக் காசில் வாங்கிப் பெருமைப் படும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்த இவர்களால் முடியவும் இல்லை. விருப்பமும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா, இருவரின் மன நிலையும், நிலப் பிரபுத்துவ காலத்திலேயே இருப்பது தான் இதற்கு காரணம். உளவியல் ஆய்வின் படி, இருவரும், தங்களை தஞ்சாவூர் மிராசாகவும், மைசூர் மகாராணியாகவும் கருதிக் கொள்ளும் ஆழ்மனக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள் என்பதையே அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன............ எசப் பாட்டு என்ற பத்தியில், இந்தியா டுடே அசோசியேட் எடிட்டர் ஆனந் நடராஜன், "மந்திகளும் மந்தைகளும்", சொந்த ஆதாயங்களுக்காக அணி மாறிக் கொள்ளும் அசிங்கம், தமிழகத்தில் புதிய எல்லையை எட்டிர்யிருக்கிறது, என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரே ஒரு பத்தி மட்டும் (இந்தியா டுடே, மே3, 2006 ப.27) .... ......
........ஒரு கட்சிக்கு வாக்கு கேட்டுச் செல்ல அக்கட்சியின் கொள்கை கோட்பாடுகள் தெரிய வேண்டாம்: அக் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டாம்; பணம் கொடுத்தால் யாருக்கும் ஓட்டுக் கேட்டு பவனி வர ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. செந்தில், சிம்ரன், முரளி, விஜயகுமார் போன்ற சினிமாவில் காலவதியாகிப் போனவர்களுக்கு அரசியல் இப்போது புகலிடமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அவர்கள் வீதியில் தூக்கி எறியப் படுவார்கள் என்றாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. சினிமாவில் சம்பாதித்த புகழ், அரசியலில் சில லகரங்களைத் தேடித் தரும் என்றால், பன்றிகளுக்கும் கூட, ஓட்டுப் போடுங்கள் என்று சொல்ல இவர்களைப் போன்றவர்கல் தயங்குவதில்லை. என்னைக் கேட்டால், இந்த அரசியல்வாதிகளுக்கு முன்னால், கழுதை, குரங்குகள், பன்றிகள் எவ்வளவோ மேல்..............".
____________________

25 4 2006

விஜயகாந்திற்கு தனிச் சின்னம் ஒதுக்கப் படவில்லையாயினும், பல தொகுதிகளில் அவரது கட்சிக்கு கொட்டு முரசு சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷன் முன் வந்துள்ளது. திருநெல்வேலியில் உள்ள 11 தொகுதிகளில் 11இலும் போட்டியிடும், விஜயகாந்தின் கட்சி, அம்பாசமுத்திரத்தில் மட்டும் மோதிரம் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. பிற 10 தொடுதிகளிலும் கொட்டு முரசே சின்னத்தில் தான் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சிம்ரன், ராம்ராஜன், தியாகு, நெப்போலியன் ஆகிய இரு தரப்புக் கூட்டணியைச் சேர்ந்த சினிமா நடிகர்களது பேச்சுக்கள் தினமலரில் பரவலாக இடம் பெற்றுள்ளன.

வழக்கம் போல ஆதரமில்லாத செய்திகளை வெளியிடும் தினமலர், தன்னுடைய இன்றைய கோட்டாவாக, கருணாநிதியின் உசிலை பேச்சுக்கு புகார் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டம் என்றொரு செய்தி 16 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்திக்கு ஆதாரமாக, எந்த எதிர்க் கட்சித் தலைவர் இப்படி ஒரு புகாரைச் செய்ய முன் வந்திருக்கிறார் என்ற விளக்கம் எதுவுமில்லை.

சரத்குமாருக்கு தினமலரும், தினத் தந்தியும் தொடர்ந்து, உரியதை விடக் கூடுதல் முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள சின்னஙகள் என்னென்ன என்பது குறித்த செய்திகள் இன்றைய 4 பத்திரிகைகளிலுமே விரிவாக இடம் பெற்றுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மொத்தம் 121 பேர் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிக்கும் மொத்தம் 70 பேர் போட்டியிடுகின்றனர். தூட்த்குக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிக்கும், மொத்தம் 84 பேர் போட்டியிடுகின்றனர்.

புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்துடன் போட்டியிடுவதால், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியே போட்டியிடுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சரத்குமார் பேசும் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசுவது போன்ற படம், ஒவ்வொரு கூட்டத்திற்கும் தனித் தனியாக் தினத் தந்தியில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது.

அதே போல தினகரனில் சரத்குமாருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட செய்திகள் மட்டுமே இடம் பெறச் செய்யப் படுகிறது. 25 4 06 தினகரனின் 2 மற்றும் 3 ஆம் பக்காங்களில் சரத் மீது சாடல் என்றொரு செய்தியும், சரத் மன்றம் கூண்டோடு கலைப்பு என்ற செய்தியும் இடம் பெற்றிருக்கிறது.

திமுக அணிக்கு ஆதரவு என்ற செய்தி தினகரனில் மட்டும் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.
தினகரனில் இன்றைய சிறப்புப் பேட்டியாக, அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் கே பாண்டுரங்கனின் சிறப்புப் பேட்டி 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு அவர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் கோயில் மணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தினமணி மட்டும் செய்தி வெளியிட்டுள்ளது [ப9].

24 4 2006

அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள ஜமா அத் தலைவர் ஜெஇனுலாதீனின் பேச்சு தினத் தந்தியில் 24 4 2006 4ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


தினகரனில் இன்றும் 3ஆம் பக்கத்தில் தயாநிதியின் பேச்சு 8 காலம் படமாக பிரமாண்டமாக வெளியிடப் பட்டுள்ளது.
இன்றைய சிறப்புப் பேட்டியாக் பா ஜ க தேசியத் துணைத் தலைவர் இல கணேசனின் பேட்டி வெளியாகியுள்ளது.
னடிகர் கார்த்திக் ஆவேச பேட்டி, தினமலரின் 16 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
திருமாவளவனின் பேச்சு தினமலரில் 10 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தேர்தலில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், தினமணியில் லீட் ஸ்டோரி அந்தஸ்தை, காவிரி நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்ல தமிழகம் முடிவு என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது பிற நாளிதழ்களின் இந்தச் செய்தியைக் காண இயலவில்லை.
தமிழகத்தில் இன்று (24 4 2006) பிரச்சாரம் செய்ய இருக்கும் செய்தி, பல நாளிதழ்களிலும் இடம் பெற்றுள்ளது. தினத் தந்தி, இலவச சமியல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறும் குற்றச் சாட்டிற்கு ஜெயலலிதாவின் பதிலை 20 ஆம் பக்கதில் விரிவாக வெளியிட்டுள்ளது. 15 ஆயிரம் ஏழை தம்பதியினருக்கு கியாச் இணைப்பு வழங்கப் பட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார், என்கிறது அந்தச் செய்தி


23 4 2006

தமிழின் தரமான பத்திரிகை
இனிதான் ஆரம்பிக்கப் படவேண்டும்.


தினகரனில் திமுக சார்பு சர்வே முடிவுகளும்
தினத் தந்தியில் அதிமுக சார்பு முடிவுகளும்

தமிழகப் பத்திரிகைகள் எதையும் நாசூக்காகவோ, கொஞ்சம் நயவஞ்சகத்துடனோ கூடச் செய்வதில்லை. தனது சார்பு நிலைப்பாடு பற்றி வெளிப்படையாகவே செயல் படுத்துகின்றன. தமிழின் முதல் தரமான பத்திரிகை இனி தான் ஆரம்பிக்கப் பட வேண்டும்.

கருத்துக் கணிப்புகள் அறிவியல் முறைப்படுடனும், பக்கச் சார்பின்றியும் நடத்தப் படுகின்றதா என்பது பற்றியும் எவரும் எந்தக் கேள்வியும் எழுப்பப் படுவதில்லை. திமுகவிற்குச் சாதகமான முடிவுகளை அறிவிக்கும் கருத்துக் கணிப்பாக இருந்தால், அது தினகரனில், முதல் பக்கச் செய்தியாகும். தினத் தந்தி இருட்டடிப்புச் செய்யும். தினமலர், அந்த ஆய்வில் கருணாநிதி, தயாநிதி ஆகியோருக்கு எக்டிரான தகவல்களை முன்னிலைப் பௌட்த்தி செய்திகள் வெளியிடும். தினமணி, அந்தக் கருத்துக் கணிப்பில் ஒடுக்கப் பட்ட மக்கள் குறித்தோ, சிறுபான்மையினர் குறித்தோ ஏதும் தகவல் இருந்தால் அதைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி விட்டு, நடு நிலை போன்ற தோற்றம் ஏற்படுத்தி விடும் வகையில் செய்திகளைத் தேர்வு செய்யும்.

ஒரு தனியார் கல்லூரிப் பேராசிரியர் (அவர் எந்தக் கல்லூரி என்று கூட தகவல் இல்லை), ஒருவர் நடத்திய செய்தியின் அடிப்படையில் தினத் தந்தி 7ஆம் பக்கத்தில் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

# எம் ஜி ஆரை டிஸ்மிஸ் செய்தபோது ஏற்பட்ட அலை இப்போது வீசுகிறது என்று கோபிச் செட்டிப் பாளையத்தில் வைகோ பேசிய பேச்சு தினமலரின் 23 4 2006 இதழில், ப.7ல் வெளியாகியுள்ளது.

# கேரள சட்ட சபைக்கான பொதுத் தேர்தலில் இலவச அறிவிப்புகள் இல்லை, மைசெட் இரைச்சல் இல்லை, சுவர் விளம்பரங்கள் இல்லை என்ற குறிப்புடன் ஒரு விரிவான செய்தி, "எங்கட நாட்டில் இதெல்லாம் சகஜமா", என்ற த லைப்புடன் தினமலரில் 23 4 2006 2ஆம் பக்கத்தில் ஒரு விரிவான வெளியாகியுள்ளது.

# திருமாவளவனின் பேச்சுக்கள் அரிதாகவே தமிழ் இதழ்களில் காண முடியும். கமல்காசன் விஷயத்தில் கரடி விடுகிறார் கருணாநிதி என்ற தலைப்புடன் ஒரு செய்தி தினமலரில் 23 4 2006 ப.6இல் வெளியாகியுள்ளது.

# தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகச் செயலர் ஏன் திமுகவை ஆதரிக்கிறோம், என்று அளித்துள்ள விளக்கம், தினமலரின் 23 4 2006 7ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தயாநிதிக்கு தினகரனில் இட ஒதுக்கீடு

தினகரன் தொடர்ந்து தயாநிதி மாறனுக்குக் குறைந்தது 8 காலம் வண்ணப் படத்துடன் கூடிய செய்தியை வெளியிடுவது என்று தீர்மானித்திருக்கிறது. இந்த மரியாதை கருணாநிதியைத் தவிர வேறு எவருக்கும் வழங்கப் படாத ஒரு வாய்ப்பாகும். கருணாநிதியின் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் கூடும் மக்கள் திரளைக் காட்டுவதற்காகவே தினமும் கடைசிப் பக்கம் ஒதுக்கப் படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது பேரன் தயாநிதிக்கும் மட்டும் இப்படி பெரிய அளவுப் படங்களைத் தினமும் வெளியிடுகிறோமே என்று, தினகர்னுக்கு வெட்கம் ஏற்படாதா? இதை இவ்வளவு வெளிப்படையாகச் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக யார் காரணம்?

சு ப வீரபாண்டியனின் பேட்டி தினகரனில்

திமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வரும் சு ப வீயின் சிறப்புப் பேட்டி 23 4 2006 தினகரனின் 8 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

சீமைப் பசு இலவசம்

விஜயகாந்த் ஏழைக் குடும்பங்களுக்கு சீமைப் பசு இலவசம் என்ற செய்தி தினமணியின் 23 4 2006 முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

கிருஷ்ணசாமி சிறப்புப் பேட்டி

23 4 2006 தினமணி இதழில், தலித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் காவிரி நடுவர் மன்றம் குறித்த சிறப்புப் பேட்டி 5 ஆம் பக்கம் இடம் பெற்றுள்ளது.

ஜான் பாண்டியன் கட்சியில்
அவரது மனைவி பொதுச் செயலர்

ஜான் பாண்டியன் தொடங்கிய கட்சியில் அவரது மனைவி பொதுச் செயலராக இருக்கிறார். தமிழ் நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அந்தக் கட்சி திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் என்று அறிவித்திருக்கிறார். தினமணியில் இந்தச் செய்தி 11 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஜனநாயக ரீதியில் குடும்ப அரசியலை வெளிப்படையாகச் செய்யும் பண்பாடு, தலித் இயக்கங்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது கவனிக்கத் தக்கது.

1 comment:

Sivabalan said...

Good Work!!

Keep it up!!