Sunday, April 16, 2006

தினமலரின் உருப்படியான செயல்

வேட்பாளர்களின் சொத்துக்களை வெளியிடுவதில்
தினமலர் முன்னுரிமை


தமிழ் நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டம் மூலம் கட்டாயப் படுத்தி இருக்கிறது. அதையொட்டி, வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள், இந்தச் சொத்து விவரங்களையும் சேர்த்தே தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளில், தினமலர், வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை முன்னுரிமை அடிப்படையில் வெளியிட்டு வருகிறது

தமிழ முதல்வரும் ஆண்டிப்பட்டி வேட்பாலருமான ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ 24.65 கோடி. திமுக பொதுச் செயலரின் சொத்து மதிப்பு விவரங்கள் (ப.2), ம தி மு கவைச் சேர்ந்த மு. கண்ணப்பன் சொத்து மதிப்பு ரூ 2 கோடி (ப.6) தற்போதைய அ தி மு க அமைச்சர் நயினார் நாகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ 1.42 கோடி (ப. I), தற்போதைய அமைச்சர் தாமோதரனின் சொத்து மதிப்பு (ப.1`6), தென்காசி தொகுதியின் வேட்பாளர் கருப்பச்சமிப் பாண்டியனின் சொத்து விவரங்கள் (ப.IV), சன்கரங்கோவில் வேட்பாளர் கருப்பசாமியின் சொத்து மதிப்பு, எனப் பல வேட்பாளர்களின் சொத்து மதிப்புக்களை தினமலர் வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை தினத் தந்தி தவிர பிற நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன..
மீண்டும் அதிமுக ஆட்சி: ஜெ உறுதி என்று வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு ஜெயலலிதா அளித்த பேட்டியை, தினமலரும், தினத் தந்தியும் லீட் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளன.

தலைவர்களின் பெயர்களைச் சரியாக வெளியிட மறுக்கும் தினமலர்

லட்சிய தி மு க வின் தலைவர் விஜய டி ராஜேந்தர் மயிலாடுதுறையில் போட்டியிடப் போவதாகவும், அத்துடன் 11 வேட்பாளர்களின் பட்டியலையும் 4 நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. இதில் தினமலர் தவிர பிற 3 நாளிதழ்களும் லட்சிய திமுகவின் தலைவர் பெயரை விஜய டி ராஜேந்தர் என்றே வெளியிடுகின்றன. தினமலர் மட்டும், டி.ராஜேந்தர் என்றே வெளியிடுகிறது. திருமாவளவன் பெயரை, தொல் திருமாவளவன் என்று தமிழ் நாளிதழ்கள் யாவும் வெளியிட, தினமலர் மட்டுமே திருமாவளவன் என்று வெளியிட்டு வருகிறது. இப்படி பல தலைவர்களது பெயர்களையும் சரியாக வெளியிட மறுத்தே வருகிறது தினமலர். இவ்வாறு தவறாக வெளியிடப் படும் தலைவர்களது பெயர்களின் பட்டியலைத் தனியாகவே தொகுக்கலாம்.

ராம்தாசின் பேட்டியைப் புறக்கணித்த தமிழ் பத்திரிகைகள்

ராமதாசின் தைலாபுரத்துப் பேட்டியை, தி இந்து நாளிதழ் மட்டும் [ப.4] வெளியிட்டுள்ளது தமிழ் நாளிதழ்களில் எதுவுமே இந்தப் பேட்டியை வெளியிடவில்லை.
கருணாநிதியின் பேச்சுக்கு 4 நாளிதழ்களும் முக்கியத்துவம்
கருணாநிதி, தஞ்சாவூர், பாபநாசம், மயிலாடுதுறை, குக்பகோணம், திருவாரூர், திருச்சி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள், தமிழ்ப் பத்திரிகைகளில் பாகுபாடில்லாமல் பரவலாக இடம் பெற்றுள்ளன.

ஜெயலலிதாவை முழுதாகப் புறக்கணித்த தினகரன்

அதே போல, ஸ்டாலில் கடையனல்லூரில் பேசிய பேச்சு, தினமணி தவிர பிற 3 நாளிதழ்களிலும் விரிவாக இடம் பெற்றுள்ளது.

ஜெயலலிதா, ஆண்டிப் பட்டியில் பேசிய பேச்சு, வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி, மக்களை கருணாநிதி திசை திருப்புவதாக வெளியிட்டுள்ள அறிக்கை யாவும் பரவலாக இட்ம் பெற்றுள்ளன. தினகரனில் மட்டும் இந்த மூன்றும் இடம் பெறவில்லை.

சிதம்பரத்தின் பேட்டி தினகரனில் இடம் பெறவில்லை

சிதம்பரத்தின் சென்னை பேட்டி தினகரனிலும் (ப.7), தினமணியிலும் (ப. 11), தினமலரிலும் (ப.4) இடம் பெற்றுள்ளது. தினத் தந்தியில் சிதம்பரத்தின் பேட்டி இடம் பெறவில்லை.

ஆதாரமில்லாமல் செய்தி வெளியிடுவதில் தினமலரைப் பின்பற்றும் தினகரன்

16 4 2006 நாளிட்ட தினகரனில் லீட் ஸ்டோரியாக வைகோவை சேர்த்தது தவறா? அதிமுகவில் திடீர் குழப்பம் "இந்து" கருத்துக் கணிப்பு எதிரொலி என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்திக்கு ஆதாரமாக அதிமுக அமைச்சர் ஒருவர் கூறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அமைச்சர் யார் என்பது பற்றியோ, வேறு ஆதாரங்கள் எதுவுமே மேற்கோள் காட்டப் படவில்லை. இந்தச் செய்தியே முழுதும் ஆதாரமில்லாமல் எழுதப் பட்டதாகக் கருத இடமிருக்கிறது.

நேற்று தினமலர் இதழில், இடம் பெற்ற லீட் ஸ்டோரியும் இதுவும் ஏறத் தாழ ஒரே ரகம். ஆதாரங்கள் எதனையும் மேற்கோள் காட்டாமல் தன்க்களது பத்திரிகையின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப செய்தி எழுதுவதில் முன்னோடியாகத் திகழும் தினமலரைப் பின்பற்றி தினகரன் இன்றைய செய்தி எழுதப் பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

நேற்றைய தினமலர் லீட் ஸ்டோரி, ஆதாரமில்லாமல் எழுதப் பட்டிருப்பதாக நமது விமர்சனத்தில் குறிபிட்டிருந்தோம். அதை மீண்டும் நினைவூட்டும் வகையிலும் இன்றைய தினகரனின் லீட் ஸ்டோரியையும் ஒப்பிட்டுக் கொள்வதற்காக மறு பிரசுரம் செய்கிறோம்.

ஆதாரமில்லாத தினமலரின் லீட் ஸ்டோரி

15 4 2006 சனிக்கிழமைல் தினமலர் நாளிதழின் லீட் ஸ்டோரியாக, கருத்துக் கணிப்பு முடிவுகளால் அதிமுக, திமுக, கலக்கம், பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. ஒரு செய்தி என்பதற்கு உரிய எந்த உட்கூறும்
இந்தச் செய்தியில் காணப் படவில்லை.
2 அணிகளும் தி இந்து நாளிதழின் கருத்துக்
கணிப்பைப் பார்த்துக் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறும் இந்தச் செய்தி இதற்கு ஆதாரமாக எதையும் முன் வைக்கவில்லை. தவிர, 8 பாராக்களில் விவரிக்கப் பட்டுள்ள இந்தச் செய்தியில், 7 பாராக்கள், இதுவரை தேர்தல் களத்தில் என்னென்ன நடந்துள்ள என்ற
முன்கதைச் சுருக்கத்தைத் தான் வெளியிட்டிருக்கிறது.

பிரசாரத்தை தீவிரப் படுத்த இரண்டு அணிகளும் திட்டம் என்று சொல்லும் இந்தச் செய்தி, இதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. கலக்கம் அடைந்ததாகக் கூறுவதோ, பிரச்சாரம் தீவிரப்படுத்தப் பட இருப்பதாகக் கூறுவதோ, தினமலர் "சிறப்பு நிருபரின்",
கற்பனையன்றி வேறில்லை என்ற முடிவுக்கு ஒரு வாசகன் எளிதில் வந்து விடும் ஆபத்து இதில் இருக்கிறது.

தாம்பரத்தில் பாக்கியராஜ் பிரச்சாரம் தினகரனில் மட்டும் (7ஆம் பக்கத்தில்) வெளியாகியுள்ளது.

சிறுபான்மையினரின் குரலைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழ் நாளிதழ்கள்

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ரிபாயியின் மேலப் பாளையப் பிரச்சாரப் பேச்சு, தினகரனில் மட்டும் வெளியாகியுள்ளது.

இன்றைய சிறப்புப் பேட்டிகள்: எழுத்தாளர் ரவிக்குமார் பேட்டி
தினமணியில்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக் கண்ணுவின் பேட்டி, தினமணியில் 7 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சரும் இளையான்குடி திமுக வேட்பாளருமான ராஜ கண்ணப்பனின் பேட்டி, தினமணியில் 7 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ரவிக்குமாரின் பேட்டி தினமணியில் 10 ஆம் பக்கம் வெளியாகியுள்ளது. மூத்த பத்திரிகையாளர் பொன் தனசேகரன், எழுத்தாளர் ரவிக்குமாரைப் பேட்டி கண்டிருக்கிறார்.
தினகரன் 2 நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் தொல் திருமாவளவன் பேட்டியை வெளியிட்டிருந்தது. அதற்குப் பின் இந்த 4 நாளிதழ்களில் இடம் பெறும் முக்கிய தலித் தலைவரின் பேட்டி இதுவாகும்.

பிரமாண்ட புகைப்படம்

திமுக தலைவர் கருணாநிதி தஞ்சாவூரில் பேசிய பேச்சைக் கேட்கக் கூடிய பிரமாண்ட கூட்டத்தின் பெரிய சைசிலான்ஃ அரைப்பக்க அளவிலான புகைப்படம் தினகரனின் கடைப்பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் இவ்வளவு பெரிய புகைப் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இந்தப் புகைப் படத்தை தினகரனில் வெப்சைட்டில் காணலாம்.

2 comments:

இரா.சுகுமாரன் said...

இது சரியான முயற்சி பத்திரிக்கைகள் தங்களுக்குள் அரசியல் நடத்துகின்றன, அவர்கள் எத்தகைய முகமூடி கொண்டுள்ளார்கள் என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரியும் எனினும், எந்தந்த செய்திகளில் எத்தகைய நடைமுறைகளை கடைபிடிக்கின்றன என்பதை இத்தகைய பதிவுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி

Arulselvan said...

உங்கள் காமென்ட் படித்ததும் மனம் விட்டுச் சிரித்தோம். பத்திரிகைகள் எப்படிச் செய்தியை வெளியிடுகின்றனவோ, அதன் அடிப்படையில் தான் எங்களின் எதிர்வினையைப் பதிவு செய்கிறோம்.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை தினமணி மொத்தமாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட தொகையை வெளியிட்டிருந்ததால் அதை அப்படியே வெளியிட்டிருந்தோம். திமுக பொதுச் செயலர் க் அன்பழ்கனின் சொத்து விவரங்கள் வெளியிடப் பட்டிருந்ததே தவிர, அதன் மொத்த மதிப்பை வெளியிடவில்லை. செய்திகள் மீதான விமர்சனங்களி முன் வைக்கும் எங்களுக்கு கூட்டிக் கழித்துக் கொண்டிருப்பது இப்போதைக்கு தேவையற்ற வேலை என்று நாங்கள் கருதியதால், அவ்வாறு செய்யவில்லை.

திமுக பொதுச் செயலர் தவிர பலரது சொத்துக்களையும் நாங்கள் பத்திரிகைகளில் இருந்தவாறே வெளியிட்டிருக்கிறோம். திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ நாங்கள் சார்பானவர்கள் அல்ல. அது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் எந்தச் செயலுக்கும் விளக்கம் தர ஆயத்தமாக இருக்கிறோம். உங்கள் விமர்சனத்திற்கு எஙக்ள் நெஞ்சார்ந்த நன்றி.

ஊடக விமர்சனக் குழுவினர்.