Monday, April 17, 2006

தீவிரமாகும் பத்த்ரிகைகளின் சார்புநிலை

தினமணி ஜெயலலிதாவுக்குத் தரும் முக்கியத்துவம்.

சனிக்கிழமை அன்று, ஜெயலலிதா மனு தாக்கல் செய்கிறார் என்று லீட் ஸ்டோரி வெளியிட்ட தினகரன், இன்று “சேப்பாக்கம் தொகுதியில் இன்று கருணாநிதி மனு தாக்கல், 11வது முறையாக போட்டி”, என்ற தலைப்புடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. தினமணியில், கருணாநிதியின் மனு தாக்கல் செய்தியை முதல் பக்கத்தில் பத்து செ மீ உயரமும், 2 பத்தி அகலமும் கொண்ட செய்தியாகச் சுருக்கமாக வெளியிடப் பட்டுள்ளது. தினமணி, கருணாநிதியை விட, ஜெயலலிதாவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறது என்று கருத இடமிருக்கிறது.

தினகரனில் த மு மு க தலைவர் ஜவாகிருல்லாவின் சிறப்புப் பேட்டி

"இந்துத்வா கொள்கைகளையே பின்பற்றுகிறார் ஜெ. இது பா ஜ க பினாமி ஆட்சி", த மு மு க தலைவர் ஜவாகிருல்லாவின் சிறப்புப் பேட்டி 17 04 2006 தினகரனில் 8ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

தி மு க தலைவருக்கு மட்டும் தான் கூட்டம் கூடுகிறதா?
தினகரனின் பக்கச் சார்பு

17 4 2006 தினகரனின் 16 ஆவது பக்கத்தில் "இதுவரை காணாத மக்கள் எழுச்சி. பிரம்மாண்டம் கண்டு கருணாநிதி மகிழ்ச்சி", என்ற தலைப்புடன் 8 காலச் செய்தி இடம் பெற்றுள்ளது. ஜெயலலிதாவிற்கோ, வைகோவிற்கோ கூடும் கூட்டத்தை விட, கருணாநிதிக்குக் கூடும் கூட்டம் எவ்வளவு அதிகம் என்பதற்கான சரியான ஆதாரங்களுடன் இந்தச் செய்தி வெளியிடப் படவில்லை.

தீவிரமாகும் சார்பு நிலை

கோவில்பட்டியில் நல்ல கண்ணுவின் பேச்சு (ப.2), நெல்லையிலும் சேரன்மாதேவியிலும் நடிகர் நெப்போலியன் பேச்சு (ப.3, ப.4), பாளையங்கோட்டையில் த மு மு க செயலர் ரிபாயி பேச்சு (ப.3), விழுப்புரத்தில் ராமதாசின் பேச்சு (ப.6), பூந்தமல்லியில் இளங்கோவன் பேச்சு (ப.7), விருத்தாசலத்தில் அன்புமணி பேச்சு (ப.7) என திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களது பேச்சுக்களால் தினகரன் நிரம்பி வழிகிறது.
இது தவிர, கருணாநிதியின் அறிக்கை (ப.6), ஜி கே வாசனின் பேட்டி (ப.6), விஜய டி ராஜேந்தருக்கு கருணாநிதியின் அழைப்பு (ப.7) என்று மேலும் மேலும் திமுக கூட்டணி தொடர்பான செய்திகளே தினகரனின் 17 4 2006 பக்கங்களை அலங்கரிக்கின்றன. தினகரன், திமுக சார்பு நிலையில் செய்திகளை வெளியிடுகிறது என்பதை ஒளிவு மறைவு இல்லாமலே வெளியிடும் போக்கு, தேர்தல் நாள் நெருங்க நெருங்க அதிகரித்துக் கொன்டே வருகிறது.

பன்முகத் தன்மை கொண்ட தினமணி

தினமணியின் முதல் பக்கத்தில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் பேசிய பேச்சு 5 பத்திகள் அகலத்தில் விரிவாக வெளியிடப் பட்டுள்ளது. கருணாநிதி, ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் என்ற செய்தியும், சேப்பாக்கத்தில் கருணாநிதி பேசிய பேச்சும், ஜெயலலிதா முரிறியில் போட்டி? என்ற செய்தியும் முதல் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

திருநெல்வேலியில் நெப்போலியன் பேச்சு (ப3), கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு (ப.4), விஜயகாந் பேட்டி (ப.4), ஜி கே வாசன் பேட்டி (ப.5), நல்ல கண்ணு பேட்டி (ப.7), சன்கரய்யா பேட்டி (ப.7), கருணாநிதி பேச்சு (ப.9) சிவகங்கையில் ப சிதம்பரம் பேச்சு (ப.7) மதுரையில் விஜயகாந் பேச்சு (ப.7), தாராபுரத்தில் நடிகர் சந்திரசேகர் பேச்சு (ப.12) என பல தரப்புச் செய்திகளின் கலவையாக வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது தினமணி.

பொதுவாக, தலித் மைனாரிட்டி தரப்பைத் தவிர, பிற அரசியல் கட்சிகளின் பல தரப்புக் கருத்துகளையும் மக்கள் முன் வைக்கும் ஒரே நாளிதழாக தினமணி விளங்குகிறது.

தினத் தந்தியின்
அதிமுக சார்புநிலை:

முதன் முறையாக ஜெயலலிதா அல்லாத வேறு ஒரு அரசியல் கட்சியின் செய்தி, தினத்தந்தியின் லீட் ஸ்டோரியாக்கப் பட்டிருப்பதாக நாங்கள் கருதுவது, இன்றைய (17 4 2006) தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள "சென்னையில் ஒறெ நாளில் கருணாநிதி - வைகோ - போட்டி போட்டு தேர்தல் பிரசாரம்", என்ற செய்தி முதன்மைச் செய்தியைத் தான்.
சுப்ரமணிய சாமி சென்னையில் அளிட்த்க பேட்டி (ப.3) நல்ல கண்ணுவின் திருச்சி பேட்டி (ப.3), மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு - விஜயகாந் மீது கல்வீச்சு (ப.4), ராமதாசின் செங்கற்பட்டு பேச்சு (ப.8), நெல்லை மாவட்டத்தில் நெப்போலியனின் பேச்சு (ப.8), சென்னையில் வைகோவின் பேச்சு (ப.9), சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியின் பேச்சு (ப.10), ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி பேச்சு (ப.10) தேனி பகுதியில் ஜெயலலிதா பிரசாரம் (ப. 18), விஜயகாந் மதுரை பிரச்சாரம் (ப.11), நடிகர் செந்தில் பேச்சு (ப.15) ஆகியவை இன்று (17 4 2006) தினத் தந்தியில் இடம் பெற்றுள்ள முக்கியமான பிரச்சாரம் தொடர்பான செய்திகள். இதில் அதிமுக கூட்டணி சார்பான செய்திகள் அதிகம் இடம் பெற்றிருப்பதையும், திமுக கூட்டணி தொடர்பான செய்திகளுக்கு இடம் மறுக்கப் பட்டிருப்பதையும், தினகரனிலும், தினமணியிலும் வெளி வந்த செய்திகளுடன் ஒப்பிட்ட்டு உறுதி செய்து கொள்ளலாம்..

தினமலரும் அதிமுக சார்பு நிலையில் தான் செய்தி
வெளியிடுகிறது.

மதுவிலக்கு பற்றி தேர்தல் அறிக்கையில் கட்சிகள் மூச், காவிரி, பெரியாறு பிரச்னைகளும் புறக்கணிப்பு,, மறந்துட்டாங்க என்ற செய்தி இன்றைய (17 04 2006) லீட் ஸ்டோரியாக்கப்பட்டிருக்கிறது. செய்தி முழுக்க யாரையும் மேற்கோள் காட்டாமல் ஒரு தனி நபரது பார்வையைப் போல, இந்தச் செய்தி (?) வெளியிடப் பட்டிருக்கிறது. செய்திக்குரிய இடத்தில், செய்தியைப் போன்ற தோற்றம் தரும் வகையில், ஒரு சொந்தக் கருத்தை வெளியிடுவது தினமலர் மட்டுமே பின்பற்றும் வழிமுறை.
இதைத் தவிர, வைகோவின் விழுப்புரத்துப் பேச்சு (ப.1), கருணாநிதியின் தஞ்சாவூர்ப் பேச்சு (ப.1), நல்ல கண்ணுவின் திருச்சி பேட்டி (ப.3), ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் பேச்சு (ப4) கருணாநிதியின் நள்ளிரவு பேட்டி (ப.4), கருணாநிதியின் அறிக்கை (ப.4), நடிகர் பாகியராஜ் பிரச்சாரம் (ப.16), விஜய டி ராஜேந்தருக்கு கருணாநிதி அழைப்பு (ப.16)விஜயகாந் மீது கல் வீச்சு (ப.16), நெல்லையில் நெப்போலியனின் பேச்சு (ப.7), வைகோவின் சென்னை பேச்சு (ப.10), மீண்டும் நடிகர் நெப்போலியனின் நெல்லை பேச்சு (ப.11), கருணாநிதியின் சேப்பாக்கம் பிரச்சாரம் (ப14) ஆகியவை இன்று (17 4 2006) தினமலரில் இடம் பெற்றுள்ள செய்திகளாகும்.
விஜய டி ராஜேந்தரை, விஜய ராஜேந்தர் என்று இன்றைய தினமலரின் செய்தித் தலிப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர்களின் பெயர்களை வெளியிடுவதில் தினமலர் குறும்புத்தனம் செய்வதாக நேற்று எழுதியிருந்தோம்.
தினமலரின் செய்திகளிலும், அதிமுக சார்பு நிலையைக் காண முடியும். திமுக தரப்பில் கருணாநிதி, ஸ்டாலின், சில சினிமா நடிகர்கள் பேச்சுக்களை வெளியிடுவதுடன் நிறுத்திக் கொள்வது தினமலரின் வழக்கமாக இருந்து வருகிறது.
____________

4 comments:

Sivabalan said...

Good work

VSK said...

தங்களின் பணி பாராட்டுக்குரியது!

வாழ்க! வளர்க!

பிரதீப் said...

ரொம்பச் சரியாச் சொன்னீங்க சார்.
ஒரு பக்கம் தினகரன், தமிழ் முரசு ரெண்டும் என்னமோ திமுக தவிர தமிழ்நாட்டுல வேற கட்சியே இல்லாத மாதிரி செய்திகளைக் கொட்டுது.

இன்னொரு பக்கம் தினமணி, தினமலர் ரெண்டும் ரொம்ப மோசமா ஜெ. ஆதரவு நிலை எடுத்திருக்கு. இதில மக்கள் ஆதரவு இல்லாத தினபூமி மாதிரி நமது எம்ஜியார் பினாமி பத்திரிகைகள் வேற.

தினகரன்ல கலைஞருக்குக் கூட்டம் கடலளவு வருதுன்னா தினமலர்ல அவரோட மற்றும் அவரது ஆதரவாளர்களோட சொத்து மதிப்பைப் பட்டியல் போட்டுக் காட்டுறாங்க. போதாக்குறைக்கு சோனியாவுக்கு கார் இல்லைங்கறது பத்தி ஒரு கிண்டல்! ஏன், ஜெ.வோட சொத்துப் பட்டியலை வெளிய விட வேண்டியதுதானே?

என்னமோ போங்க, முந்தியெல்லாம் துக்ளக், நக்கீரன் மட்டும்தான் இவ்வளவு கேவலமா இறங்கிட்டு இருந்தாங்க. இப்ப???

Anonymous said...

//பொதுவாக, தலித் மைனாரிட்டி தரப்பைத் தவிர, பிற அரசியல் கட்சிகளின் பல தரப்புக் கருத்துகளையும் மக்கள் முன் வைக்கும் ஒரே நாளிதழாக தினமணி விளங்குகிறது.//

அதுவே இந்த லட்சணத்துல தானா?