Tuesday, April 18, 2006

தடுமாறும் தமிழ்ப் பத்திரிகைகள்

விஜயகாந் சொத்து பற்றி 4 பத்திரிகளும்
4 வித தகவல்களை வெளியிடுகின்றன

விருத்தாச்சலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜயகாந்த், எவ்வளவு சொத்து விவரம் என்பதையும் தாக்கல் செய்திருக்கிறார்.
தினத் தந்தியின் 8ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள இச்செய்தி, விஜயகாந்திற்கு ஒன்பதே கால் கோடி சொத்து இருப்பதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலரின் 3 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தி விஜயகாந்திற்கு 12.21 கோடி சொத்து இருப்பதாகச் சொல்கிறது.
தினமணி 9ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி, ரூ 12.50 கோடி சொத்துக்கள் விஜயகாந்திடம் இருப்பதாகக் கூறுகிறது.
தினகரனில் விஜயகாந் சொத்து விவரம் வெளியிடப் பெறவில்லை.
வேட்பாளர் தாக்கல் செய்த தகவல்களின் அடிப்படையில் சேகரித்து வெளியிடப் படும் இந்தத் தகவலில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்பது ஆய்வுக்குரியது.
எனினும், தமிழ் செய்தித்தாள்களில் வெளியான விஜயகாந்த் சொத்து விவரம் குறித்த தகவலில் எது சரியானது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், தி இந்து நாளிதழில் இது குறித்து என்ன தகவல் இடம் பெற்றிருக்கிறது என்று தேடினோம். இந்து தகவலின் படி, விஜயகாந்த் சொத்து மதிப்பு ரூ 12.50 கோடிக்கும் மேல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தினமணியில் வெளியாகியுள்ள தகவல், தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தகவலுடன் ஒத்துப் போகிறது.

சரத்குமார் திமுகவிலிருந்து விலகியது குறித்த
செய்தி வெளியிடலில் பத்திரிகைகளின் பக்கச் சார்பு

சரத் குமார் விலகியதை அடுத்து உருவப் பொம்மைகள் எரித்த செய்தி தினகரனில் இன்று (18 4 2006) மூன்று தனித் தனிச் செய்திகளாக படங்களுடன் பெரிய அளவில் வெளியிடப் பட்டுள்ளது.
தினத் தந்தியில், சரத் குமார் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக செய்தி எதுமே இடம் பெறவில்லை. அதே வேளை,
அதிமுகவினர், சரத்குமார் அதிமுகவில் சேர்ந்ததை இனிப்பு விநியோகித்துக் கொண்டாடியதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு புறம், உருவ பொம்மை எரிப்பு. மறுபுறம் இனிப்பு விநியோகம் என்ற தகவல்.
தினமலரில் உருவ பொம்மை எரிக்கப் பட்ட செய்தியும், இனிப்பு வழன்கப் பட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது.
தினமணியில் உருவ பொம்மை எரிப்பு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இனிப்பு விநியோகம் பற்றிய செய்தி இடம் பெறவில்லை.
தினத் தந்தியில் இனிப்பு விநியோகம் பற்றிய செய்தி, தினகரனில் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக பகக்த்திற்குப் பக்கம் செய்தி, தினமணியில் உருவ பொம்மை எரிக்கப் பட்டதாக செய்தி, தினமலரில், உருவ பொம்மையை ஒரு தரப்பு எரித்ததாகவும், இன்னும் ஒரு தரப்பு இனிப்பு விநியோகம் செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு தரப்புச் செய்தியை வெளியிடுவது, அல்லது சில விஷயங்களில் மட்டும் இரு தரப்பையும் வெளியிட்டு நடு நிலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்று தமிழ் நாளிதழ்களே தடுமாற்றத்தில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

“புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் வேட்பு மனு தாக்கல்”, செய்தியை இருட்டடிப்பு செய்த தினமலரும் தினகரனும்

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப் பிடாரம் தொகுதியில் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தச் செய்தி தினமணியிலும், தி இந்துவிலும் படத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தினத் தந்தியில் 8 ஆம் பக்கத்தில் செய்தியும், 20 ஆம் பக்கத்தில் படமும் வெளியாகியுள்ளன. தினமலரிலும், தினகரனிலும் இது பற்றிய செய்தியோ, படமோ இடம் பெறவில்லை. தலித் தலைவர்களின் பேச்சுக்களை இருட்டடிப்பு செய்யும் தமிழ் நாளிதழ்கள் அவர்களது செய்திகளைப் பெருமளவில் புறக்கணித்து விடுகின்றன. தினமலர் இவ்விஷயத்தில் முன்னணி வகிக்கிறது. தினமலரின் பல வழிமுறைகளைப் பின் பற்றத் தொடங்கியிருக்கும் தினகரன், இவ்விஷயத்திலும் தினமலரின் வழிமுறையைப் பின் பற்றத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.

இன்றைய சிறப்புப் பேட்டிகள்

தனது சிறப்புப் பேட்டித் தொடரில் இன்று தினகரன், அதிமுகவைச் சேர்ந்த க. சுப்புவின் பேட்டியை வெளியிட்டுள்ளது.
தினமலர் இன்று விஜயகாந்தின் சிறப்புப் பேட்டியை 18 ஆம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நெடுமாறனின் பேட்டி தினமணியில் மட்டுமே

"வாய்ப்பூட்டை அரசியல் கட்சிகள் கண்டிக்கவில்லையே... ஈழபோராட்டத்தை ஆதரிக்கும் வேட்பாளருக்கே ஓட்டு, ஆதரவாளர்களுக்கு நெடுமாறன் வேண்டுகோள்", என்ற தலைப்புடன் தினமணியில் பழ நெடுமாறனின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பை பேட்டியாக வெளியாகியுள்ளது. ஜனநாயக உரிமைகள் குறித்த இந்தப் பேட்டியி ஒவ்வொரு பத்திரிகையும் வெளியிட்டிருக்க வேண்டிய ஒரு பேட்டி. ஆனால், என்ன காரணத்தால், பழ நெடுமாறனின் பேட்டியைத் தமிழ் பத்திரிகைகள் புறக்கணித்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரியது.
கருணாநிதியின் அரசியல் கவிதை "சிறு நரிகள் சிம்மாசனக் கனவு சிதைந்து போகும்", என்ற தலைப்பில் தினகரனில் 6ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இன்றைய லீட் ஸ்டோரி

தினமணி
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ இலவச அரிசி: ஆண்டிபட்டியில் ஜெயலலிதா வாக்குறுதி, என்ற தலைப்புடன் தினமணியின் லேட் ஸ்டோரி வெளியாகியுள்ளது.

தினகரன்
"அதிமுகவில் சரத்குமார்- ராதிகா, திமுகவுக்கு ராஜேந்தர் ஆதரவு, களை கட்டுகிறது தேர்தல், மனு தாக்கல் விறுவிறுப்பு", என்பது என்றைய தினகரனின் லீட் ஸ்டோரியாகும்.

தினமலர் :
“ரூ 22 கோடி, திமுக தலைவர் கருணநிதியின் சொத்து மதிப்பு, வேட்பு மனு தாக்கலில் விவரத்தை வெளியிட்டார்”.

தினத்தந்தி:
"புதிதாக அமைய இருக்கும் அதிமுக ஆட்சியின் திட்டம்.. ரேஷனில் 20 கிலோ அரிசி வாங்கும்போது, 10 கிலோ அரிசி இலவசம்.. ஜெயலலிதா வாக்குறுதி.."

வேட்பாளர்களது சொத்து விவரங்களை வெளியிடுவதில் தினமலர் தீவிர முனைப்பு

வேட்பாளர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதில் தினமலர் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. இன்றைய இதழில் திருப்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் தினமலர் இதழில் இடம் பெற்றுள்ளது. இன்றைய பிற 3 நாளிதழ்களை ஒப்பிடுகையில், தினமலரில் வேட்பாளர் சொத்து விவரம் கணிசமாக இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

ஊடகக் கண்காணிப்புக் குழுவின் சார்பில்
ஜோ அன்டோ சத்யன்

5 comments:

Srikanth Meenakshi said...

ஜோ மற்றும் குழுவினர்,

உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

//ஜனநாயக உரிமைகள் குறித்த இந்தப் பேட்டியி ஒவ்வொரு பத்திரிகையும் வெளியிட்டிருக்க வேண்டிய ஒரு பேட்டி. ஆனால், என்ன காரணத்தால், பழ நெடுமாறனின் பேட்டியைத் தமிழ் பத்திரிகைகள் புறக்கணித்திருக்கின்றன என்பது ஆய்வுக்குரியது.//

ஒரு பத்திரிக்கை எதை வெளியிடுகிறது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இதே போல் ஒரு செய்தியை ஒரு பத்திரிக்கை வெளியிட்டு, அதே பத்திரிக்கை இந்தக் குறிப்பிட்ட செய்தியை வெளியிடவில்லை என்றால் அந்த முரண்பாட்டை நீங்கள் சுட்டிக் காட்டலாம். அல்லது எல்லாப் பத்திரிக்கைகளும் வெளியிட்ட ஒரு பிரதான செய்தியை ஒரு பத்திரிக்கை வெளியிடவில்லை என்றால், அதையும்் சுட்டிக் காட்டலாம். ஒரே ஒரு பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை மற்றவை வெளியிடவில்லை என்று சொல்வது சரியான ஊடக விமரிசனம் இல்லை. குறிப்பாக, இந்தச் செய்தியை எல்லாப் பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தைச் சொல்வது ஊடக விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்பாடு.

இவ்விமரிசனத்தைக் கடந்து உங்கள் பணியைப் பாராட்டி வரவேற்கிறேன்.

நன்றி.

Anonymous said...

NALLA THARAMAANA ALSALKAL.....PAZA. NEDUMAARAN KARUTTHUKKAL ELLAP VELIPADUTTHAP PATTIRUKKA VAENDUM!
SU.BA.VEE. AEN VILAKINAR ENBATHUM ALASAP PAAD VAENDUM!

Anonymous said...

NALLA AYVU AVZTTHUKKAL...THODARKA!

Arulselvan said...

Shrikanth,

தங்களின் பின்னூட்டத்திற்கு முதலில் எம் நன்றி. பழ நெடுமாறனுக்காக நாங்கள் வாதிட வரவில்லை. ஒரு ஜனநாயக உரிமைக்கான குரலாக அவர் குரல் வெளிப்பட்டிருக்கும் போது, ஜனநாயகக் காவலர்களான பத்திரிகைகள் இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை தராவிட்டாலும், புறக்கணிக்காமல் இருக்கலாம். பழ நெடுமாறன், சென்னையில் பத்திரிகையாளர்களைக் கூட்டி இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பத்த்ரிகிகளுக்கு (சிலவேளைகளில் தினமணி தவிர) மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் உரிய அங்கீரமளித்து செய்திகளை ஒரு போதும் வெளியிடுவதில்லை. தமிழ் பத்திரிகைகள் மனித உரிமை மீறல் குறித்த செய்திகளை வெளியிடும் அவல நிலை குறித்துத் தனியா நாம் ஆய்வு செய்ய வேண்டும். தங்களின் விமர்சனத்திற்கு மீண்டும் எங்களின் நன்றி.
ஊடக விமர்சனக் குழுவினர்.

பின் குறிப்பு: தங்களின் குரங்கு என்ற வலைப்பூவிற்குச் சென்று பார்த்தேன். இதழியல் மாணவர்களுக்குப் பயன்படும் ஏராளமான தகவல்கள் அதில் இருந்தன. இனி நான் தடர்ந்து உங்களின் வலைப்பூவை வாசிக்கத் தீர்மானித்திருக்கிறேன். என் சக மாணவ நண்பர்களையும் வாசிக்கச் சொல்வேன்.

Anonymous said...

Nice work keep on doing like this